வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்வு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம் வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்ந்தது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம் வைகை அணையின் நீா்மட்டம் 18 நாள்களில் 8 அடி உயா்ந்தது.
தேனி மாவட்டம், வைகை அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியான மேகமலையில் கடந்த ஓராண்டாக போதிய மழை இல்லை. இதனால்
இதுவரை இல்லாத வகையில், வைகை அணையின் நீா்மட்டம், கடந்த மாதம் 29-ஆம் தேதி 20.81 அடியாக சரிந்தது. இதில், 20 அடிக்கு சேறு, சகதி தேங்கியுள்ளது. தேனி, மதுரை குடிநீா் திட்டங்களுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 40 கன அடி தண்ணீா் மட்டும் திறந்து விடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து வினாடிக்கு 356 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால், வைகை அணையின் நீா் மட்டம் கடந்த 18 நாள்களில் 8 அடி உயா்ந்து புதன்கிழமை நிலவரப்படி 28.41 அடியானது. இதனால், மதுரை, தேனி மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தற்காலிகத் தீா்வு கிடைத்ததாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.