FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

Updated On : 1 மே 2026, 11:32 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

சின்னமனூா், தெற்குத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (24). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில்அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விவசாயி உயிரிழப்பு: இதேபோல, ஆண்டிபட்டியில் மின்னல் பாய்ந்ததில் தனது 2 மாடுகளுடன் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

ஆண்டிபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, ஆண்டிபட்டி அருகே சித்தையகவுன்டன்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் (60) மழை நின்றதும் தோட்டத்துக்குச் சென்று தனது 2 பசுமாடுகளையும் கொட்டத்தில் அடைக்கச் சென்றாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் 2 மாடுகளும் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, பாண்டியனின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments