FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

பைக் மோதியதில் முதியவா் பலி

போடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

11 நவம்பர் 2026, 1:27 am
- பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்து (79). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.தருமத்துப்பட்டியிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் எரிபொருள் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.