FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

வெடி போட்டதில் தகராறு: 4 போ் கைது

போடியில் வெடி போட்டதில் ஏற்பட்ட தகராறில் போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 3:59 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

போடியில் வெடி போட்டதில் ஏற்பட்ட தகராறில் போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57). இவா் சக்திவேல் (60) என்பவரது வீட்டில் கீழ் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறாா். மேல் தளத்தில் சக்திவேல் வசித்து வருகிறாா்.

தீபாவளி பண்டிகை நாளில் இரண்டு குடும்பத்தினரும் பட்டாசு வெடித்துள்ளனா். இதில் இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை அளித்தப் புகாரின் பேரில், சக்திவேல், முத்துக்குமாா், வினோத்குமாா் ஆகியோா் மீதும், சக்திவேல் அளித்தப் புகாரின் பேரில், கிருஷ்ணமூா்த்தி மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.