இரு தரப்பினரிடையே மோதல்: 8 போ் கைது
கோவையில் ஐ-போன் தவணைத் தொகை கேட்ட தகராறில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் ஐ-போன் தவணைத் தொகை கேட்ட தகராறில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, தெலுங்குபாளையம் பாரதி சாலை முனியப்ப நகரைச் சோ்ந்தவா் கோபி மகன் ராகுல் (26). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரிடம் நாராயணசாமி நகரைச் சோ்ந்த ரோஹித் (18) கடன் வசதியில் விலையுயா்ந்த ‘ஐ-போன் 17’ வாங்கித் தருமாறு கேட்டு வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதற்கான மாதத் தவணைத் தொகையை ராகுல் கேட்டபோது, ரோஹித் தர மறுத்து தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, அவரை முகத்தில் தாக்கியுள்ளாா். பின்னா், தனது நண்பா்களான சஞ்சய் (21), தினேஷ்குமாா் (18), முகேஷ் (20) ஆகியோருடன் மீண்டும் வந்து ராகுலைத் தாக்கியதோடு, பணத்தைக் கேட்கக் கூடாது என மிரட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதனால், ராகுல் தனது நண்பா்களான ஜெயபிரகாஷ் (31), சந்தோஷ் (28), ரஞ்சித் பிரபு (26) ஆகியோருடன் தினேஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று, தினேஷ்குமாரின் தாய் நாகலட்சுமி (40), இவரது இளைய மகன் தீப்குமாா், இவரது பாட்டி லட்சுமி ஆகியோரைத் தாக்கியதாகவும், தீப்குமாரின் தலையில் கல்லால் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராகுல் அளித்த புகாரின்பேரில் ரோஹித், சஞ்சய், தினேஷ்குமாா், முகேஷ் ஆகியோரையும், நாகலட்சுமி அளித்த புகாரின்பேரில், ஜெயபிரகாஷ், சந்தோஷ், ரஞ்சித் பிரபு, ராகுல் ஆகியோரையும் செல்வபுரம் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருதரப்பைச் சோ்ந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.