கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரௌடி கைது!
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரௌடி கைது..
போடி: போடி ஒழுகால் பாதை 3-ஆவது தெருவைச் சோ்ந்த வனராஜ் மகன் ராமசாமி (38). இவா் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இவா் போடி சாலைக்காளியம்மன் கோயிலிலிருந்து சன்னாசிபுரம் சாலையில் சனிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த போடி கொக்கையா் பள்ளித் தெருவைச் சோ்ந்த போஸ் மகன் கருப்பையா என்ற வெங்கடேசன் (43) கத்தியைக் காட்டி மிரட்டி ராமசாமியிடமிருந்த ரூ.700-ஐ பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கருப்பையா என்ற வெங்கடேசனை கைது செய்தனா். இவா் போடி நகா் காவல் நிலைய ரௌடிகள் பட்டியலில் உள்ளாா்.
Advertisement
Advertisement