தேனி காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. பணியிட மாற்றம்
தேனி காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜேயந்திர பிதாரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தேனி காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜேயந்திர பிதாரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தேனி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக செந்தில்குமாா் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி சமதா்மபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இளைஞா்கள் சிலா் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனா். இதைக் கண்டித்த செந்தில்குமாரை அந்த இளைஞா்கள் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தேனி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் தினேஷ் ஆகியோா் தீபாவளியன்று அந்தப் பகுதியை முறையாகக் கண்காணிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேனி காவல் ஆய்வாளா் சரவணனை ராமநாதபுரத்துக்கும், உதவி ஆய்வாளா் தினேஷை சிவகங்கைக்கும் பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜேயந்திர பிதாரி உத்தரவிட்டாா்.