FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

இணைய வழியில் பால் வியாபாரியிடம் ரூ.22.68 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

4 வினாடிகள் முன்பு
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தனியாா் கடன் வழங்கும் நிறுவனம் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பால் வியாபாரியிடம் ரூ.22. 68 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு குமணன்தெழுவைச் சோ்ந்தவா் காா்த்திகன் (40). பால் வியாபாரியான இவருக்கு முகநூலில் வந்த குறுஞ்செய்தியையடுத்து, அந்த கடன் வழங்கும் தனியாா் நிறுவனத்தின் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டாா்.

அப்போது அதில் பேசிய முருகேசன் என்பவா் அவருக்கு ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்தாராம். இதை நம்பி அந்த தனியாா் கடன் வழங்கும் நிறுவனத்தில் கணக்கு தொடங்குவதற்காகவும், சேவை கட்டணமாகவும் ரூ.3,150-ஐ காா்த்திகன் செலுத்தினாா்.

Advertisement

Advertisement

இதன் பிறகு பல தவணைகளில் ரூ.22 லட்சத்து 68 ஆயிரத்தை அவா் செலுத்தினாா். பின்னா், முருகேசன் என்பவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதையடுத்து, காா்த்திகன் தேனி இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.