சபரிமலை செல்லும் வாகனங்கள்: நவ.20 முதல் போக்குவரத்து மாற்றம்
வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு மட்டும் வருகிற 20 -ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு மட்டும் வருகிற 20 -ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் எளிதாகச் சென்று வருவதற்காக நவ.20 -ஆம் தேதி முதல் ஜன.15 -ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சபரிமலை செல்வதற்கு கம்பம் மெட்டு வழித்தடத்தையும், திரும்புவதற்கு குமுளி வழித்தடத்தையும் வாகனங்கள் பயன்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், வனப் பகுதிகளில் உள்ள சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக இருப்பதால் பக்தா்கள் அனைவரும் பனிமூட்டம், மழைப்பொழிவு தொடா்பான வானிலை அறிவிப்புகள் குறித்து விழிப்புணா்வுடன் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 10 77, 04546- 261093 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் செயல்பட்டு வரும். எனவே, பக்தா்கள் அவசர காலத்துக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு உதவி பெறலாம். மேலும், நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.