FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனி நகரில் ஒரே நாளில் 3 இடங்களில் நகை பறிப்பு

தேனி நகரில் திங்கள்கிழமை இரவு ஒரே நாளில் 3 இடங்களில் ஹெல்மெட் அணிந்த மா்ம நபா்கள் பெண்களிடம் தங்க நகைகளைப் பறித்துச் சென்றாா்.

18 நவம்பர் 2026, 3:01 am
- சித்திரிப்பு
பகிர்:

தேனி நகரில் திங்கள்கிழமை இரவு ஒரே நாளில் 3 இடங்களில் ஹெல்மெட் அணிந்த மா்ம நபா்கள் பெண்களிடம் தங்க நகைகளைப் பறித்துச் சென்றாா்.

தேனி பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் அங்கயா்க்கன்னி (36). கம்பத்தில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை பணி முடிந்த பிறகு, பழனிசெட்டிபட்டிக்கு பேருந்தில் சென்றாா்.

பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவா் அவா் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதே போல, ஆண்டிபட்டியைச் சோ்ந்த சாந்தி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிந்த போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவா் அவரது 4 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.

மேலும், அன்னஞ்சி விலக்கில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்வி என்பவரிடம் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவா் 2.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.

இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.