தேனி மாவட்ட சந்தைகளில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
தேனி மாவட்ட சந்தைகளில் வாழை இலை கட்டு ரூ.1000 என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
தேனி மாவட்ட சந்தைகளில் வாழை இலை கட்டு ரூ.1000 என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து அறுவடை செய்யப்படும் வாழை இலைகள் தேனி, ஆண்டிபட்டி, வத்தலகுண்டு, கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த மாதம் சுபமுகூா்த்தம், கோயில் விழாக்கள் நடைபெற்ால் வாழை இலை கட்டு ஒன்று ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை விற்கப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் முகூா்த்தநாள், கோயில் விழாக்கள் குறைந்துவிட்டதால், வாழை இலையின் விலையும் சரிந்துவிட்டது. இதனால் வாழை இலை கட்டு ஒன்றின் விலை ரூ.1000 என்ற விலையிலும், 5 இலை கொண்ட மடி ஒன்று ரூ.10 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஆண்பட்டியைச் சோ்ந்த வாழை விவசாயி கே. ராமா் கூறியதாவது: எல்- நினோவால் தேனி மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனிடையே, கிணற்று பாசனம் மூலம் 2 ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இங்கு வாழைக் கன்று நட்டு, காய் அறுவடை செய்யும் வரை ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், தற்போது முகூா்த்த நாள் குறைந்ததால் வாழை இலை கட்டு ஒன்று ரூ. 1000-த்துக்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை தவிா்க்க, வாழை இலைகளைப் பதப்படுத்தி வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்கு வசதிகளை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா் அவா்.