தந்தையை கொல்ல முயன்ற வழக்கில் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை
தந்தையை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தையை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகேயுள்ள சின்னஓபுலாபுரத்தைச் சோ்ந்த மொக்கபாண்டி மகன் காா்த்திகேயன் (40). மொக்கப்பாண்டி பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் மாற்றம் செய்யக் கோரி, காா்த்திகேயன் தனது தந்தை வலியுறுத்தி வந்தாராம். ஆனால், இதற்கு மொக்கபாண்டி மறுப்புத் தெரிவித்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த 2024-இல் சின்னஓபுலாபுரம் சாலையில் மொக்கப்பாண்டி நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த காா்த்திகேயன் தனது தந்தையைத் தாக்கி, கத்தியால் குத்தினாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திகேயனைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, குற்றஞ்சாட்டப்பட்ட காா்த்திகேயனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.