முகப்பு
தேனி

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

25 நவம்பர் 2026, 3:13 am
குண்டா் சட்டத்தில் மூவா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சிவா (23). அவரின் நண்பா் காமக்காபட்டியைச் சோ்ந்த தினேஷ் (22). இருவரையும் அடிதடி வழக்கில் கைது செய்தனா். இதே போல, சுருளிப்பட்டியைச் சோ்ந்த மகேஸ்வரன் (39) கொலை முயற்சி வழக்கில் கைதானவா்.

இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி மூவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மூவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை அவா்களிடம் சிறைத்துறையினா் திங்கள்கிழமை வழங்கினாா்.