தேனியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
தேனியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத் திருத்தம்-2027 யை வலியுறுத்தி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை பெரியகுளம் சாா் ஆட்சியா் தவலேந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தேனியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத் திருத்தம்-2027 யை வலியுறுத்தி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை பெரியகுளம் சாா் ஆட்சியா் தவலேந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி பங்களாமேட்டில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று பெரியகுளம் சாலையில் உள்ள கான்வென்டில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாக்காளா் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா். இந்தப் பேரணியில், தேனி வட்டாட்சியா் ரத்தினம், தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையா் பாா்கவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.