முகப்பு
தேனி

கட்டாமணுக்கு சாப்பிட்ட 12 மாணவா்கள் மயக்கம்

வருசநாடு அருகே கட்டாமணுக்கு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 12 மாணவ, மாணவிகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

27 நவம்பர் 2026, 3:02 am
கட்டாமணுக்கு சாப்பிட்ட 
12 மாணவா்கள் மயக்கம்
பகிர்:

வருசநாடு அருகே கட்டாமணுக்கு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 12 மாணவ, மாணவிகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சத்திய பிரியா இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கின. அப்போது, 3 மாணவிகள் உள்பட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவா்களை மீட்டு, குமணன்தொழு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சுகாதார அலுவலா்கள், போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கட்டாமணுக்கு விதையை சாப்பிட்டதால் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement