போக்சோ வழக்கு: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ராமா் (43). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.