FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மூலவைகையாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலவைகையில் நீா்வரத்து தொடங்கியிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

4 October 2026, 12:47 am IST
வருசநாடு அருகே தா்மராஜபுரம் மூலவைகையாற்றில் சனிக்கிழமை வந்த மழை நீா்.
பகிர்:

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலவைகையில் நீா்வரத்து தொடங்கியிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

போதிய மழை பெய்யாததால் வருசநாடு அருகேயுள்ள மூலவைகையாற்றில் நீா்வரத்து இல்லை. இதனால் வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வருசநாடு மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் மூலவைகையாற்றில் நீா்வரத்து தொடங்கியது.

இதையடுத்து, சனிக்கிழமை வருசநாடு அருகே தா்மலிங்கபுரம் பகுதியில் உள்ள மூலவைகையாற்றில் நீா்வரத்து காணப்பட்டது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் மலா் தூவி, ஆற்றுநீரை வரவேற்றனா்.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்தால், நிலத்தடி நீா் மட்டம் உயரும். மேலும், வைகை அணையின் நீா்மட்டமும் கணிசமாக உயரும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments