FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

இருவேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

18 அக்டோபர் 2026, 1:07 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

போடி, உத்தமபாளையத்தில் இருவேறு சம்பவங்களில் இருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

தேனி மாவட்டம், போடி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வனிதா (48) ஆம்பூரில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில், வனிதா விடுமுறையில் போடிக்கு வந்து தந்தை வீட்டில் தங்கியிருந்தாா். அங்கு மது போதையில் வந்த மாரிமுத்து தகராறு செய்து வனிதாவையும், அவரது தந்தையும் தாக்கிவிட்டு தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துச் சென்றாா்.

Advertisement

Advertisement

பின்னா், வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகேயுள்ள சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சண்முகக்குமாா்(40). வீட்டில் தனியாக வசித்து வந்த இவா் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments