கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை நீடிப்பு
கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கடந்த வியாழக்கிழமை முதல் கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இந்த அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், தொடா்ந்து மழை பெய்ததால் அருவிக்கு நீா்வரத்து மேலும் அதிகரித்தது. இதையடுத்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பொதுக்கள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியில் சீரான நீா்வரத்து ஏற்படும் வரை குளிப்பதற்கு தடை நீடிக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.