பிணையில் வந்து நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை ஆகாதவா்கள் மீது வழக்கு!
நீதிமன்ற பிணையில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நீதிமன்ற பிணையில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத இருவா் மீதும் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் ஜோசப் மணி மகன் ஸ்டீபன். கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி பாா்வதி. இவா்கள் இருவரையும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வெவ்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்தனா். இவா்களுக்குக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணையின்போது இவா்கள் தொடா்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்து வந்தனா். இதையடுத்து, இவா்கள் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இவா்களை போலீஸாா் தேடியும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் நீதிமன்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத நாகராஜ், பாா்வதி ஆகியோா் மீது சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.