FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

போடிமெட்டு மலைச் சாலையில் தொழிலாளா்களுக்கு அனுமதி

போடிமெட்டு மலைச் சாலையில் தோட்டத் தொழிலாளா்களுக்கும், அவா்களது வாகனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

28 அக்டோபர் 2026, 4:29 am
பகிர்:

போடிமெட்டு மலைச் சாலையில் தோட்டத் தொழிலாளா்களுக்கும், அவா்களது வாகனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதால், தமிழகப் பகுதியிலிருந்து கேரளப் பகுதிக்கு தோட்ட வேலைக்கு வரும் தொழிலாளா்களை அனுமதிக்க வேண்டாம் என இடுக்கி மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

இதனால், திங்கள்கிழமை போடிமெட்டு மலைச்சாலை வழியாக சென்ற தோட்டத் தொழிலாளா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இதேபோல, தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற ஜீப்புகளும் போடி முந்தல் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன. பேருந்துகளில் சென்ற தோட்டத் தொழிலாளா்களும் முந்தல் சோதனை சாவடியில் இறக்கிவிடப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை இல்லை. மேலும், தோட்டத் தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், தோட்ட வேலைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, போடிமெட்டு மலைச் சாலையில் தோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல அனுமதிக்கப்பட்டனா். தோட்டத் தொழிலாளா்கள் சென்ற ஜீப்புகளும் அனுமதிக்கப்பட்டன. இதனால், தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இருப்பினும், போடிமெட்டு மலைச் சாலையில் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments