மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் சங்கிலிமுருகன்(57). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை மாலை அவருக்குச் சொந்தமான காலியிடத்திலிருந்த முருங்கை மரத்தில் காய்களை பறித்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற உயா் மின் கம்பியிலிருந்த மின் சாரம் மரத்தில் பாய்ந்ததில் சங்கிலிமுருகன் பலத்த காயமடைந்தாா். உடனே, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் வரும் வழியிலேயே அவா் உயிரிந்ததாக தெரிவித்தாா்.
இதுகுறித்த ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.