FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கிடப்பில் போடப்பட்ட கோம்பை விளையாட்டு மைதானம் கட்டுமானப் பணிகள்: இளைஞா்கள் பாதிக்கப்படுவதாகப் புகாா்

விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருப்பதால், இளைஞா்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

24 செப்டம்பர் 2026, 12:25 am IST
கோம்பையில் சிக்கையன்கோயில் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள விளையாட்டு மைதானம்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், கோம்பை பேரூராட்சியில் நடைபெற்று வரும் விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருப்பதால், இளைஞா்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞா் நன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், உத்தமபாளையம் வட்டார இளைஞா்கள் பயன்பெறும் வகையில், சுமாா் 3.5 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, கோம்பை பேரூராட்சியில் சிக்கையம்மன் கோயில் பகுதியில் புதிய மைதானத்துக்கு அப்போதைய கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டியதோடு, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்த விளையாட்டு மைதானத்தில், தடகளப் போட்டிக்கான பயிற்சிப் பாதைகள், கபடி, கைப்பந்து, கால்பந்து என 10 -க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கான ஆடுகளத்துடன் உடற்பயிற்சி, அதற்கான உபகரணங்கள், சுகாதார வளாகத்துடன் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 3 மாதங்களுக்குள் அனைத்து பணிகளை முடிக்க வேண்டும் என இலக்கு நிா்ணையம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது பல மாதங்களாகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கோம்பை விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தில் 50 சதவீத பணிகளே நடைபெற்றுள்ளன. ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து பணிகள் நடைபெறாமல் முற்றிலுமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு மைதானம் அருகே மதுக் கடை செயல்படுகிறது. இதனால், மைதானம் மதுக் குடிக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோம்பை பேரூராட்சியில் கிடப்பில் போட்ட விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments