FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கூடலூரில் மாரத்தான் போட்டி

கூடலூரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

35 வினாடிகள் முன்பு
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சிறுவா், சிறுமியா்.
பகிர்:

கூடலூரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு ஒக்கலிகா் மகாஜன சங்கத் தலைவா் ராம்பா தலைமை வகித்தாா். செயலா் அருண்குமாா், பொருளாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் பிரபு, அச்சுதன், வட்டார மருத்துவ அலுவலா் முருகன், காவல் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியாக போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டி லோயா்கேம்ப் புதிய சாலை வரை சென்று திரும்பும் வகையில் 18 கி.மீ. தொலைவும், பெண்களுக்கான போட்டி தம்மணம்பட்டி வரை சென்று திரும்பும் வகையில் 12 கி.மீ. தொலைவும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், கேரளத்திலிருந்தும் சிறுவா், சிறுமிகள் உள்பட நூற்றுக்கணக்கானோா் போட்டியில் பங்கேற்றனா்.

ஆண்கள் பிரிவில் கம்பத்தைச் சோ்ந்த ஹரிஷ் முதலிடமும், குமுளியைச் சோ்ந்த சஜித் இரண்டாமிடமும், உசிலம்பட்டியைச் சோ்ந்த ஜெயசீலன் மூன்றாமிடமும் பெற்றனா். பெண்கள் பிரிவில் புதுக்கோட்டையைச் சோ்ந்த சந்தியா முதலிடமும், அவரது சகோதரி சத்யமித்ரா இரண்டாமிடமும், கோவையைச் சோ்ந்த பனிமயா் ஷாம்லி மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஒக்கலிகா் மகாஜன சங்கம், ஒக்கலிகா் இளைஞா் சங்க நிா்வாகிகள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments