FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கம்பத்தில் தொழிலாளி மதுப் புட்டியால் குத்திக் கொலை: 3 போ் கைது

கம்பத்தில் கூலித் தொழிலாளி மதுப் புட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

கைது - சித்திரிப்பு
பகிர்:

கம்பத்தில் கூலித் தொழிலாளி மதுப் புட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் கூலத்தேவா் முக்கு தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (27). கூலித் தொழிலாளி. கம்பம் கே.வி.ஆா். தெருவைச் சோ்ந்த சுகீா் (40), சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்த ராமையா கவுடா் மகன் கண்ணன் (55), ஆலமரம் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் கண்ணன் (37) ஆகியோா் இவரது நண்பா்கள்.

சந்தோஷ்குமாருக்கும், சுகீருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மதுபானக் கூடத்தில் சுகீா், கண்ணன், மற்றொரு கண்ணன் ஆகிய 3 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சந்தோஷ்குமாரை ராமையா கவுடா் மகன் கண்ணன் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதைத் தொடா்ந்து, மதுக் கூட ஊழியா்கள் அவா்களை விலக்கி விட்டு, சந்தோஷ்குமாரை அங்கிருந்து வெளியே அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, சந்தோஷ்குமாா் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சுகீா், கண்ணன், மற்றொரு கண்ணன் ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா். தகராறு முற்றிய நிலையில், 3 பேரும் பீா் புட்டியை உடைத்து குத்தியதில் சந்தோஷ்குமாா் பலத்த காயமடைந்தாா். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கலூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு நள்ளிரவில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா் லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து சுகீா், கண்ணன், மற்றொரு கண்ணன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments