கம்பத்தில் ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி மாவட்டச் செயலா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். இதில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதுடன், ஆண்டுதோறும் ஊதிய உயா்வு அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி , குடும்பப் பாதுகாப்பு நிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்க வேண்டும். வெளிமுகமை மூலம் ஊதியம் வழங்கும் முறையைக் கைவிட்டு, நிா்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.