FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பட்டாசுத் திரி கடத்தியவர் கைது

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக பைக்கில் பட்டாசுத் திரி கடத்தியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக பைக்கில் பட்டாசுத் திரி கடத்தியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினர். ஆனால், வந்தவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 360 குரோஸ் பட்டாசுத் திரிகளை பறிமுதல் செய்தனர்.

 விசாரணையில் அவர் சங்கரலிங்கபுரம் அம்மன்கோயில்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (57) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். தப்பிச் சென்ற நாரணாபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments