காய்கறி, மலர் சாகுபடி: விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி விவசாயிகளுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி விவசாயிகளுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல்துறை தொழில்நுட்ப வல்லுநர் பாக்கியத்து சலிகா தலைமை வகித்தார்.
காய்கறி விதை மற்றும் நாற்றுகள் தேர்வு செய்வது, அங்கக ஊட்டச்சத்து நிர்வாகம், உயிரியல் பூச்சி நோய் மேலாண்மை குறித்த தகவல்களும், உயிர் உரம், மண்புழு உரம் பயன்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்து அவர் செயல்விளக்கம் அளித்தார்.
நபார்டு வங்கியின் துணைப்பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் வங்கிக்கடன் குறித்தும், பயிர்நோயியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் மனோண்மணி பூச்சி, நோய்த் தாக்குதல் மேலாண்மை பற்றியும் விளக்கமளித்தனர்.
மேலும் இப்பயிற்சியின்போது வேளாண்மை அறிவியல் நிலைய வயல்வெளித் திட்டப் பயனாளிகளின் காய்கறித் தோட்டத்தில் நேரடி பார்வையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. மல்லிகையில் ஊட்டச்சத்துக் குறைபாடு கண்டறிதல் மற்றும் நிர்வாகம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முன்னோடி விவசாயிகள் குமாரசாமி, முருகேசன் ஆகியோர் நன்றி கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.