FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

குல்லூர்சந்தையில் பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தால் பெண்கள் அவதி

விருதுநகர் அருகே குல்லூர் சந்தையில் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாததால் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:18 am IST
பகிர்:

விருதுநகர் அருகே குல்லூர் சந்தையில் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாததால் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இதை திறக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குல்லூர் சந்தை ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர், அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்தையடுத்து, ரூ.1.18 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
 ஆனால், இதுவரை, இந்த மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு திறந்து விடாமல் பூட்டியே வைத்துள்ளனர். 
இதனால், பெண்கள், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சுகாதார வளாகத்தில் உள்ள மின் பெட்டி குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் வகையில் திறந்த நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மின் பெட்டியை உயரத்தில் பொருத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதனிடையே குல்லூர்சந்தை- கூரைக்குண்டு செல்லும் சாலை மற்றும் பெரிய வள்ளிக்குளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். 
அத்துடன், ஒரு வாரத்துக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், பணம் கொடுத்து குடிநீர் வாங்கி இப்பகுதி மக்கள் பயன்படுத்தி  வருகின்றனர்.
எனவே இப்பிரச்னைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments