FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:17 am IST
பகிர்:

சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முத்தாண்டியாபுரத்தில் அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் பயன்படும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இத்தொட்டி தற்போது சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், வரும் தண்ணீரை இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் தான் சேமிக்க வேண்டியுள்ளது.
இதனிடையே இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பள்ளி மாணவ, மாணவிகள் ஆபத்தை உணராமல் விளையாடுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் அதை அகற்றி விட்டு, வேறு இடத்தில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்குதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முத்தாண்டியாபுரம் பொதுமக்கள் கூறும் போது, இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். 
அல்லது அதை அகற்றி விட்டு வேறு இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். இதுபற்றி வெம்பக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments