சிவகாசியில் காகித விழிப்புணர்வு ஊர்வலம்
சிவகாசி காகித வியாபாரிகள் சங்கம் சார்பில் காகிதம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகாசி காகித வியாபாரிகள் சங்கம் சார்பில் காகிதம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
காகிதம் எளிதில் மக்கும் தன்மையுடையது என்பதுடன் சுற்றுச்சூழலை பாதிக்காது. மறுசுழற்சிக்கு பயன்படக்கூடியது என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இங்குள்ள காளீஸ்வரி மால் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, அகில இந்திய காகித வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சுந்தர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் பிரதான வீதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் காகித வியாபாரிகள், அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற காகித தினவிழாவுக்கு அச்சங்கத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் ராதாசேகரன் வரவேற்றார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கிடையை நடைபெற்ற காகித விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் முத்துகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சங்க பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.