FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பந்தல்குடி அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்ற கோரி புகார் மனு

பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீது ஏராளமான புகார்கள் எழுந்துள்ளதால், அவரை இடமாற்றம்

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீது ஏராளமான புகார்கள் எழுந்துள்ளதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரி, முன்னாள் மாணவர் சங்கத்தினர், பொதுமக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகதத்தினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) உதயகுமாரிடம் புகார் மனு அளித்தனர்.
       அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
      இந்நிலையில், இப்பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியர்களுக்கு தேவையான மருத்துவ விடுப்பு தருவதில்லை. 2017-18 இல் மாணவர்களிடம் ரூ.250 முதல் ரூ.700 வரை வசூலித்துள்ளார். இதற்கான காரணத்தை, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் கூட தெரிவிக்கவில்லை. மாணவர்களின் கல்வி உதவித் தொகை பெற அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாணவர்களை சேர்க்க ரூ.50 வசூல் செய்துள்ளார். 
     இது குறித்து ஏற்கெனவே முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
      எனவே, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments