அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த நாளை முதல் சிறப்பு முகாம்கள்
விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த ஆக.10 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த ஆக.10 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) உதயகுமார் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள அங்கீகாரமற்ற மனைப்பிரிவு மற்றும் மனையிடங்களை வரைமுறைப்படுத்த அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் கலந்துகொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்பட்ட தனிமனையிடங்களுக்கான உரிமையாளர்கள் பங்கேற்று, அன்றைய தினமே உரிய கட்டணங்களை செலுத்தி தங்களது மனைப்பிரிவு மற்றும் தனிமனையிடங்களை வரைமுறை செய்து அனுமதி ஆணை பெற்று பயன்பெறலாம். இச்சலுகையானது 3.11.2018 வரை மட்டுமே உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் ஒன்றியங்கள் விவரம்: ஆக. 10 இல் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆக. 14 இல் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆக. 16 இல் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆக. 17 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆக. 21 இல் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆக. 24 இல் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஆக., 28 இல் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆக., 30 இல் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆக. 31 இல் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்கள், செப்.4 இல் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.