மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி: ராஜபாளையம் பள்ளி மாணவர்கள் வெற்றி
மாற்றுத் திறனாளிகளுக்கான தென் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தென் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தென் மாவட்ட அளவிலான போட்டிகள் சிவகாசியில் கடந்த வாரம் நடைபெற்றது. இப்போட்டிகளில் ராஜபாளையம், ரிதம் சிறப்பு பள்ளி சார்பில் 32 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவி அமிர்தலட்சுமியும், 50மீட்டர் பிரிவில் ஸ்ரீரஞ்சனாவும் முதலிடம் பெற்றனர். குண்டு எறிதலில் ஹரிபிரசாத், மென் பந்து எறிதலில் அமலா ஆகியோர் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா மேனேஜிங் டிரஸ்டி கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் கோடியப்பன், கணபதி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியரைப் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.