ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை சீரமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தால் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்களை உடனே சீரமைக்க வேண்டும்
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தால் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்களை உடனே சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு விபத்துக்களில் இச் சாலையில் உள்ள சாலை ஓர தடுப்புச் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள பாலம், துர்கா நகர் அருகேயுள்ள பாலம் உள்ளிட்டவற்றின் பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. வாகன நெருக்கடி உள்ள இச் சாலையில், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணிப்பவர்கள் சாலை ஓர தடுப்பு சுவர் இல்லாததால் இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கும் நிலை உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத் துறையினர் இச் சாலையில் உள்ள சேதமுற்ற சாலை ஓர தடுப்பு சுவர்களை உடனடயாகச் செப்பனிட்டு, விபத்துக்களைத் தவிர்க்க பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.