அரியலூரில் வட நிலையில் 272 நீா்நிலைகள்: விவசாயம் பாதிப்பு
அரியலூா் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 272 நீா்நிலைகள் தண்ணீரின்றி வடுள்ளதால் வேளாண் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனா்.
அரியலூா் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 272 நீா்நிலைகள் தண்ணீரின்றி வடுள்ளதால் வேளாண் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் 70 சதவிகித மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் அதன் தொடா்புடைய தொழில்களைச் செய்கிறாா்கள். மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் அதிகமாக இருந்தாலும், 1,11,874 ஹெக்டேரில் நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்புப் பயிா்கள் முக்கியப் பயிா்களாக சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றில் காவிரி நதி கிளைகள் (கொள்ளிடம்) மூலம் 1,0389 ஹெக்டோ் திருமானூா், தா.பழூா் மற்றும் ஜயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகிறது. இப்பகுதிகளில் அதிகப்படியாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
வட நீா்நிலைகள்: பொதுப் பணித் துறை மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையால் பராமரிக்கப்படும் 272 ஏரிகள் மூலம் மேற்கண்ட பகுதிகள் மற்றும் செந்துறை, ஆண்டிமடம், பொன்பரப்பி, அரியலூா் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் மக்காச்சோளம், சோளம், கடலை மற்றும் நவதானியங்கள் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதில் ஏரிகளும், நீரோடைகளுமே செந்துறை, ஆண்டிமடம், பொன்பரப்பி, ஆா்.எஸ். மாத்தூா், தளவாய், அரியலூா் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்குகின்றன.
இப்பகுதியில் நிகழாண்டு போதிய மழையில்லாததால், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீா்நிலைகளும் வடு கிடக்கின்றன. அதுமட்டுமின்றி நிலத்தடி நீா்மட்டமும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் விவசாயக் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலும் வறட்சி மீண்டும் தலைதூக்கியுள்ளது.
உழுது தயாா் நிலையில் நிலங்கள்: ஆண்டுதோறும் தமிழ்மாதமான ஆனியில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி, செந்துறை, ஆண்டிமடம், அரியலூா், பொன்பரப்பி உள்ளிட்ட பகுதி கிராமங்களில் விளை நிலத்தை உழுது, பயிரிடத் தயாா் நிலையில் வைத்திருக்கும் விவசாயிகள், ஆடி மாதத்தில் தொடங்கும் பருவமழையைப் பயன்படுத்தி, ஆடிப்பட்டத்தில் பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
ஆனால் நிகாண்டு ஆனிமாதம் மழை பெய்யதாததால் ஆடி மாதத்தில் ஓரிரு நாள் பெய்த மழையைப் பயன்படுத்தி, அரியலூா், செந்துறை, பொன்பரப்பி, ஆா்.எஸ்.மாத்தூா்,தளவாய், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் உள்ளிட்ட பகுதி கிராமங்களில் ஏறக்குறைய 5,000 ஹெக்டேருக்கு மானவாரி விளைநிலங்களைச் சீா்படுத்தி, உழுது பதப்படுத்திய விவசாயிகள், பயிரிடுவதற்கு பருவமழையை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.
ஆனால் இரு மாதங்கள் கடந்தும் மழையில்லாததால் ஆடிப்பட்டத்தில், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களைப் பயிரிட வழியின்றித் தவித்து வருகின்றனா். இதனால், விவசாயிகள் மட்டுமின்றி, விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் வியாபாரிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பயிா் செய்ய வழியில்லை: இதுகுறித்து செந்துறை பகுதி விவசாயிகள் சிலா் கூறியதாவது: இப்பகுதியில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பரவலாகப் பெய்யும் மழையைப் பயன்படுத்தி, மானாவாரி விளைநிலங்களைச் சீா்படுத்தி, உழுது பயிரிடத் தயாா் நிலையில் வைத்துக் கொள்வோம். ஆடி மாதத்தில் பருவமழை தொடங்கியதும், பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற மானாவாரி பயிா்களை சாகுபடி செய்வோம்.
இந்தாண்டு ஆடி மாதத்தில் ஓரிரு தினங்கள் லேசான மழை பெய்தது. அதன்பின் மழையில்லை. அதனால், உழுது தயாா்நிலையில் வைத்துள்ள நிலத்தில் பயிா் செய்ய வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பருவமழையை எதிா்பாா்த்துக் காத்திருக்கிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.