விருதுநகரில் அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரதம்
விருதுநகர் தலைமை அஞ்சலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் தலைமை அஞ்சலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்துக்கு கோட்டத் தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். இதில், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஜிடிஎஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் சங்கங்களின் மூன்றாம் பிரிவு, தபால்காரர், பன்திறன் ஊழியர், கிராம அஞ்சல் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.