ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியை ஏமாற்றி இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியை ஏமாற்றி இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொளிஞ்சிபட்டியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத் தக்க மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். இவரிடம் ஒரு பெண், முதியோர் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக ஆசை வார்தை கூறியுள்ளார். மேலும் நகை அணிந்து இருந்தால் விண்ணப்பிக்க இயலாது என்று கூறியதை மூதாட்டி நம்பி, நகையை கழற்றிக்கொடுத்தாராம்.
நகையை வாங்கிக் கொண்டு அந்த பெண் தப்பி ஓடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப் பிரிவு போலீஸார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.