FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கோட்டையூர் பேருந்து நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாத்தூர் அருகே பேருந்து நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 25 மே 2018, 5:16 am IST
பகிர்:

சாத்தூர் அருகே பேருந்து நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி ஊராட்சியில் கோட்டையூர் கிராமம் உள்ளது. சாத்தூரிலிருந்து-தாயில்பட்டி வழியாக சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும், கோட்டையூர் பகுதியில் நின்று செல்கின்றன. இந்த பகுதியில் உள்ள பேருந்து நிழற்குடை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும் இந்த நிழற்குடையை அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிழற்குடையை சீரமைத்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments