டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு.
மும்பை: மேற்கு ஆசிய நெருக்கடி தணிவதற்கான அறிகுறிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவடைந்தது. இதன் மூலம் தொடர்ந்து 3வது வர்த்தக அமர்வாக ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது.
உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக அந்நிய மூலதனம் தொடர்ந்து வெளியேறி வருவதும் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுக்கு முன்னதாக டாலர் குறியீடு சற்று உயர்ந்த நிலையில் இருந்ததாதக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.75 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 95.63 என்ற அளவைத் எட்டியது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு நிலையை விட 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக வர்த்தகம் நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 20 காசுகள் உயர்ந்திருந்த ரூபாய் மதிப்பு, நேற்று (திங்கள்கிழமை) மேலும் 54 காசுகள் வலுவடைந்து டாலருக்கு நிகராக ரூ. 95.99 ஆக நிறைவடைந்தது.
The rupee stayed on upward track for the third straight session and ended 11 paise higher.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.