FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

திருச்சுழி அருகே கோயில் பிரச்னைக்கு தீர்வு இறங்கி முத்தம்மனை வழிபட்ட பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னைக்கு சமரசத்தீர்வு காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள்

Updated On : 25 மே 2018, 5:14 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னைக்கு சமரசத்தீர்வு காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் இறங்கி முத்தம்மன் கோயில் உள்ளது . கடந்த இருபது நாட்களுக்கு முன்பு அக்கிராமத்தின் இருவேறு சமூத்தினரிடையே பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து கோயில் பூட்டப்பட்டது. இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் பொறுப்பு) செல்லப்பா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொப்பலாக்கரையின் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர். அப்போது இறங்கி முத்தம்மன் கோயிலை யாரும் பூட்டி வைக்கக்கூடாது எனவும், கோயிலுக்கு உள்பட்ட பகுதியில் தன்னிச்சையாக கட்டடம் எழுப்புவதோ, சீரமைப்பதோ கூடாது எனவும் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த சமரசத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை கோயில் திறக்கப்பட்டு பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக சென்று அம்மனை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments