FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 14 இல் கல்லூரி  மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்: தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி செப்டம்பர் 14 இல் நடைபெறும். என தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சுசிலா தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி செப்டம்பர் 14 இல் நடைபெறும். என தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சுசிலா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் வியாழக்கிழமை கூறியதாவது, கல்லூரி மாணவ மாணவிகள், தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் நிகழாண்டு இப்போட்டிகள் செப்டம்பர் 14 இல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டியில் ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
 அவர்களை கல்லூரியே தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.  எனவே, போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தினை அந்தந்த கல்லூரி முதல்வர் வாயிலாகப் பெற்று அதனை நிறைவு செய்து செப்டம்பர் 11 -க்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு 04562 - 252596 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments