FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடையை மீறி திறப்பு: அத்தியாவசியப் பொருள்கள் அல்லாத 30 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசின் விதிகளை மீறி திறந்ததாக அத்தியாவாசிய பொருட்கள் அல்லாத கடைகளுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசின் விதிகளை மீறி திறந்ததாக அத்தியாவாசிய பொருட்கள் அல்லாத கடைகளுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் தடை உத்தரவை மீறி அத்தியாவசியப் பொருள்கள் அல்லாத கடைகள் திறந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி மேலாளா் பாபு, காவல்துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 20 ஆம் தேதி 30 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் வேல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், அந்த 30 கடைகளின் உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments