கொல்கத்தா: பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு
கொல்கத்தாவில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்தது பற்றி...
கொல்கத்தாவில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம், பவானிபூர் பகுதியிலுள்ள பள்ளியில், திங்கள்கிழமை காலையில் ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை பாம்பு கடித்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் காலை 8.30 மணியளவில் மித்ரா இன்ஸ்டிடியூஷன் பள்ளியில், சிற்றுண்டி இடைவேளையின் போது நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் தெற்கு கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த த்ருப்தோ பால் என அடையாளம் காணப்பட்டுள்ளான். பள்ளி நிர்வாகத்தினர் உடனே அவனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, அருகிலுள்ள அரசு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
சிறுவன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறான், அவனது நிலைமை சீராக உள்ளது என்று மூத்த மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் வனத் துறைக்கு தகவல் தெரிவித்து, பள்ளி வளாகத்தை முழுமையாக சோதனையிட உதவி கோரியுள்ளது.
கொல்கத்தாவிலுள்ள முன்னணி தனியார் பள்ளி வளாகத்திற்குள் 3 ஆம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்ததாகக் கூறப்பட்ட சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
A Class-1 student was allegedly bitten by a snake inside his school in Bhawanipore area of the city on Monday morning, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.