FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கையில் அரசு பள்ளி மாணவனை சக வகுப்பு மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.

Updated On : 15 ஜூலை 2026, 4:05 pm IST
கத்தியால் குத்தப்பட்ட மாணவன்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மல்லல் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவனை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிரஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் (17) என்கிற மாணவனுக்கும், அதே பள்ளியில் படிக்கும் சக வகுப்பு மாணவர்களுக்கும் இடையே சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மோதல் முற்றிய நிலையில், இன்று காலை பள்ளி வகுப்பறையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவர்கள், சஞ்சயை குத்திவிட்டு தப்பியோடினர்.

Advertisement

Advertisement

நெஞ்சு, முதுகுப் பகுதிகளில் 4 முறை கத்தியால் குத்தப்பட்ட மாணவனை, பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய மாணவர்களைத் தேடிவரும் காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

In Sivaganga, a government school student was stabbed with a knife by his classmates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments