FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்பை: உள்ளூர் ரயிலில் பாம்பு வதந்தியால் பயணிகள் இடையே பீதி!

மும்பையில் உள்ளூர் ரயிலின் பெண்கள் பெட்டியில் பாம்பு வதந்தியால் பயணிகள் இடையே பீதி நிலவியது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 8:30 pm IST
மும்பை. - கோப்புப்படம்.
பகிர்:

மும்பை நோக்கி சென்ற உள்ளூர் ரயிலில் பாம்பு இருப்பதாகக் கூறி பயணிகள் அவசர கால அபாய சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நோக்கிச் சென்ற உள்ளூர் ரயிலின் பெண்கள் பெட்டியில் பாம்பு இருப்பதாகக் கூறி பயணிகள் அவசர கால அபாய சங்கிலியை இழுத்ததால் வெள்ளிக்கிழமை ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இதனால் நெரிசல் மிகுந்த நேரத்தில் ரயில் 12 நிமிடங்கள் தாமதமானது.

தாணே நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட பிறகு, காலை 9.15 மணியளவில் நஹூர் ரயில் நிலையம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள் ரயில் பெட்டியில் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். இருப்பினும், சோதனையில் பாம்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், "பாம்பு எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் பல பெண்கள் அதை பார்த்ததாகக் கூறியதால் பயணிகள் பீதியடைந்தனர்" என்றார். தேவையான சோதனைகள் நிறைவடைந்த பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, குர்லா ரயில் நிலையத்திலும் இந்த ரயில் சோதனையிடப்பட்டது. ஆனால் அங்கேயும் எதுவும் கண்டறியப்படவில்லை என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.

summary

A Mumbai-bound local train was delayed by 12 minutes during the morning rush hour on Friday after commuters panicked and pulled the alarm chain, claiming to have spotted a snake in the ladies' compartment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments