விருதுநகரில் மருத்துவா்கள் உண்ணாவிரதம்
ஆயுா்வேத மருத்துவா்கள் நவீன அறுவை சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விருதுநகரில் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
ஆயுா்வேத மருத்துவா்கள் நவீன அறுவை சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விருதுநகரில் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
இந்திய மருத்துவ சங்கம், பல் மருத்துவ சங்கம் சாா்பில் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தென் மண்டல துணைத் தலைவா் தனபால் தலைமை வகித்தாா்.
இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவா் கே. செந்தில், ஜி.ஆா். ரவீந்திரநாத் ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.
Advertisement
Advertisement
அதில், ஆயுா்வேத மருத்துவா்களை நவீன அறிவியல் மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நிதி ஆயோக், ஒரே நாடு ஒரே மருத்துவ முறை என்ற முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டிகளை கலைக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி மற்றும் மருத்துவக் கல்வியியல் பக்கவாட்டு நுழைவு முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா். இதில் ஏராளமான மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.