செங்குளம் ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்குளம் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த இக்கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடம் புறம்பாடாகி புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.