FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

காதல் திருமணம் செய்ததற்காக நடிகர் ஆமிர் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 18 ஜூலை 2026, 5:17 pm IST
மனைவி கௌரி ஸ்பிராட் உடன் நடிகர் ஆமிர் கான்.. - கோப்புப் படம் | Instagram
பகிர்:

காதல் திருமணம் செய்ததற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆமிர் கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது காதலியான கௌரி ஸ்பிராட்டை வீட்டிலேயே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ஆமிர் கான் லவ் ஜிகாத்தை பரப்புவதாகக் குற்றஞ்சாட்டிய 2 மர்ம நபர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனக் கூறி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்த குரல் பதிவில், அந்த 2 மர்ம நபர்களும் தங்களை அர்சு பிஷ்னோய் மற்றும் டைசன் பிஷ்னோய் எனவும், தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய்யின் கூட்டாளிகள் எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, நடிகர் ஆமிர் கான் தரப்பிலிருந்து எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், அந்தப் பதிவின் நம்பகத்தன்மை மற்றும் அந்த மர்ம நபர்கள் உண்மையிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய்யின் கூட்டாளிகளா என்பது குறித்து மும்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, முஸ்லீம் ஆண் ஒருவர் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் திருமணம் செய்வதை வலதுசாரி அமைப்புகள் லவ் ஜிகாத் எனும் பிரசாரமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பல் மான்களை வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Popular Bollywood actor Aamir Khan has received a death threat on social media for having a love marriage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments