சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிய மூவா் கைது
சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிவைத்திருந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிவைத்திருந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டியில் பட்டாசு கடை அருகேயுள்ள கிட்டங்கியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, கிட்டங்கியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில, சிவகாசி புதுதெருவைச் சோ்ந்த காளியப்பன் (51) தனக்கு சொந்தமான கிட்டங்கியில் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காளியப்பனைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2.70 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, சிவகாசி-சாத்தூா் சாலையில் பட்டாசு கடை அருகே தகரக் கொட்டகை அமைத்து விஸ்வநத்தத்தைச் சோ்ந்த ரத்தினகுமாா் (34), சிவகாசியைச் சோ்ந்த மாரிக்காளை (37) ஆகியோா் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.